Primary tabs
LXXXXIV
(இ-ள்.) மேருவரை நின்று பொதியவரை உற்ற அகத்திய மகாமுனி தமிழ்நாட்டு உள்ளோர்க்கு உறுதி பயப்ப இயல் இசை நாடகம் என்னும் செவ்விய தமிழ் இலக்கணங்களை முதல்நூல் பிறவி தோன்றக்கூற, அந்நூலைப் பலகாலும் ஆராய்ந்து பழைய காப்பியக்குடியின் வைகுதலான் தொல்காப்பியன் என்னும் காரணப் பெயரும், திரணதூமாக்கினி எனத் தந்தையாராகிய சமதக்கினியார் இட்ட இயற்பெயரும் உடைய இருடி முதல் நூலினின்றும் இயற்றமிழ் இலக்கணத்தை எடுத்துக்கொண்டு ‘மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி’ உரைக்க அந்நூலில் கூறிய அறிவின் முதிர்ச்சி நோக்கிக் குளிர்ந்த நலத்தை விரும்பாமல், எழுத்தும் சொல்லும் பொருளும் அணியும் யாப்பும் என்னும் ஐந்து இலக்கணங்களையும் முறை பிறழ்ந்தும் முடிபுஒவ்வாதும் பயப்பாடு இன்றியும் பரிசு பெறாதும் மயங்கியும் வழுவியும் ஆசிரியர் கருத்துக்கு ஒப்பக் கூறாது வேறாக இலக்கணம் கொண்டு கூறிய புலவர் பலர் ஆகையான், அவரவர் வரம்புறக் கூறிய உரைத்திறனும் பலவாக, முதலொடு முடிவும் சிந்திப் பலவாகிக் கிடந்த இலக்கணங்களையெல்லாம் தொடர்ந்து ஒரு திறண்மையுறக் கேட்போர்க்கு இனிமையுற இலக்கணங்களைத் தீபம் ஒப்ப விளக்குதலான் இலக்கண விளக்கம் என்று பெயர் விளங்க வைத்தியநாத தேசிகன், இந்நூல் உரைத்து உரையிட்டு நிலை நிறுத்தினான். அத்தன்மையுடையோன் அரிய தவத்தினால் திருஅவதாரம் செய்த மூத்த புதல்வனான சதாசிவ தேசிகன், இந்நூற்குச் சிறப்புப்பாயிரம் கூறிச் சொல்லணி இலக்கணமும் தற்பவம் தற்சமம் தேசிகம் ஆகிய மூவகைச் சொற்களிற்பட ஆராய்ந்து கூறினான். அவற்குப் பின்னர் அவதரித்தோன், தமிழ் நூல் பலவும் ஆராய்ந்து உணர்ந்து அந்நூல்களில் கூறிய பொருளினுக்கு வேறு உறாமல் தொல்காப்பிய நூலில் கூறிய மெய்ம்மை விளங்க, ஐந்து இலக்கணங்களையும் தனது மதியே கரியாகத் தந்தை முன்செய்த இலக்கண விளக்க