Primary tabs
LXXXXV
நூல் முற்றுப்பெற, தன்னிடைவந்து இரந்தோர்க்கு அறிவின் முதிர்ச்சியைப் பயக்கும் ‘திருவாரூரில் அரியணை அதன்மேல் பரிவுடன் அமர்ந்து, வளர்ந்திட எண்ணி இளம்பிறை முடித்தோன்’ திருவருளை உட்கொண்டு, மனத்திடத்துள்ள மயக்கம் நீங்கிக் கேட்குநருக்கு ‘அறிவின் ஊறும் அமுதென நிறையப்’ பாட்டியல் இலக்கணத்தை விளங்கச் செய்தான், கிரியை ஒழுக்கமும் உணர்த்தி என்கண் அவிச்சை நீங்க இன்பமாகிய வீடு பேற்றின் உபாயத்தினை எனக்கு அருளாநிற்கும் தியாகராச தேசிகன் என்னும் இயற்பெயரை உடைய குரவன் என்றவாறு.
இப்பதிகச் செய்யுள் செய்தான் வைத்தியநாத தேசிகன் மகன் பாட்டியல் பகர்ந்த தியாகராச தேசிகன் மாணாக்கன் ஆகிய புதல்வன் வைத்தியநாத தேசிகன் என்று அறிக.
[இப்பதிகத்திலிருந்து, இந்நூல் முழுவதும் வைத்தியநாத தேசிகர் செய்தாரல்லர் என்பதும், பொருளதிகார அணியலின் ஒரு கூறாகிய சொல்லணி இலக்கணம் அவர் புதல்வராய சதாசிவ தேசிகரால் இயற்றப்பட்டது என்பதும். பின் பொருளதிகாரத்து இறுதியியலாகிய பாட்டியல் வைத்தியநாத தேசிகரின் புதல்வருள் மற்றொருவராகிய தியாகராச தேசிகரால் இயற்றப்பட்டது என்பதும் புலனாகின்றன. இவை ஆசிரியர் காலத்திலோ அவருக்கு பிற்பட்ட காலத்திலோ இயற்றப்பட்டிருக்கலாம். இவை இயற்றப்பட்ட காலம் பற்றிய அறுதியிடப்பட்ட செய்தி புலப்பட்டிலது. இப்பகுதிகளை வரைந்தவர்களே இப்பகுதிகளுக்கு உரையும் வரைந்திருக்கலாம் என்பது கொள்ளத்தக்கது. சொல்லணியியலின் அமைப்பு நூலமைப்பிலிருந்து வேறுபட்டிலது. ஆனால் பாட்டியலில் காணப்படும் சில செய்திகள் நூலின் ஏனைய பகுதிச் செய்திகளொடு சில இடங்களில்