தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Ilakana Vilakkam Poorul Athigaram Aniyiyal


இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்
வெளியிடுவோர் உரை

iv

விரிவான முன்னுரையும், போதிய விளக்கமும், அரும்பதவிளக்கமும், பலபிற்சேர்க்கைகளும் தந்து பதிப்பித்தால் மொழி நூல் ஆய்வாளருக்கும், தமிழ் விரும்பிக்கற்கும் சான்றோர்களுக்கும், மாணவ அன்பர்களுக்கும் உதவியாய் இருக்குமென முன்னாள் மதிப்பியற் செயலாளர் அவர்கள் வெளியிட ஆவன செய்தவாறே இப்பதிப்பு வெளிவருகிறது.

இந்நூல் வெளியிட ஆதாரமாக அமைந்தது புகழ்மிகு தொழிலதிடரும், தமிழ்க் காவலருமான உயர்திரு பொள்ளாச்சிந. மகாலிங்கம், பி. எஸ்ஸி., எம்.ஐ.இ., அவர்கள் நூலகத்திற்கு மனமுவந்து அளித்த கையெழுத்துப் படியேயாகும். இப்படி பலநாட்களுக்கு முன் அச்சிட்டபழைய நூல் ஒன்றிலிருந்து எழுதப்பட்டுள்ளது. அன்னாருக்குப் பெரிதும் நன்றிக்கடப்பாடுடையோம்

இதனை மிகச் சிறப்பாக வகுத்தெழுதிப் பதிப்பித்துதவிய பண்டித வித்வான் திரு தி. வே. கோபாலையர், எம். ஏ., பி. ஓ. எல்.,அவர்கட்கும், செம்மையோடு வெளிவரத் தக்கமுறையில் செயலாற்றிய இந்நிலையப் பாதுகாவலர் டாக்டர் சி.எஸ். வேங்கடேசுவரன், எம். ஏ., பி. எச். டி., அவர்கட்கும்,துணை நூலகர் திரு எம். சீராளன், பி.ஏ., அவர்கட்கும் காலத்தோடு கவினுற அச்சிட்டுத் தந்த குடந்தை ஜெமினி அச்சக உரிமையாளர் அவர்களுக்கும் கனிந்த உள்ளத்தோடு நன்றி கூறிப் பாராட்டுகின்றோம்.

இத்தகைய பணிகளுக்கு ஆக்கமளித்துப் பேணிவரும் நமது தமிழக அரசை
நன்றியோடு போற்றி மகிழ்கின்றோம்.

தஞ்சாவூர்


அ. வடிவேலன்,
கௌரவ காரியதரிசி
சரசுவதி மகால் நூல்நிலையம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 01:34:17(இந்திய நேரம்)