Primary tabs
 
    பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த இலக்கணப் பெரும்புலவர் மூவருள் முதலாமவராகிய திருவாரூர் வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கத்தின் முப்படலங்களுள் முதலிரண்டு படலங்களும், பொருட்படலத்தின் முன்னிரண்டு இயல்களும் பதிப்பிக்கப்பெற்ற முறையை ஒட்டியே, முன்னையவற்றிற்குப் பயன்படுத்தப் பெற்றன போன்ற நூல்களின் துணையைக்கொண்டே அப்படலத்தின் மூன்றாம் இயலாகிய அயியியல் பதிப்பிக்கப்பெற்று உள்ளது. எடுத்துக்காட்டுப் பாடல்களில் பெரும்பான்மையும் முதற் பதிப்பின் பாடபேதங்களே கொள்ளப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டுப் பாடல்களின் போந்த பொருள், அணி வகைகள் பாடல்களில் பெரும்பான்மையும் முதற் பதிப்பின் பாடபேதஙகளே கொள்ளப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டுப் பாடல்களின் போந்த பொருள், அணி வகைகள் பாடல்களின் அமைந்துள்ள திறன், ஒத்த கருத்துடைய பிற அணி நூல்களின் நூற்பா மேற்கோள், தேவையான அகர வரிசைகள் இவற்றோடு, இவ்வணியியலில் குறப்பிடப்படாது ஏனைய அணி நூல்களில் காணப்படும் அணி வகைகளின் விளக்கம் அடங்கிய பிற்சேர்க்கையையும் இணைத்துப் பதிப்பித்தல் வேண்டும் என்று தஞ்சை சரசுவதிமகாலில் கௌரவ காரியதரிசியாயிருந்த முதுபெரும்புலவர் திருவாளர் நீ. கந்தசாமிப் பிள்ளைஅவர்கள் இட்ட ஆணையை ஒட்டியே இவ்வியல் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
 
             
						