தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Ilakana Vilakkam Poorul Athigaram Aniyiyal


இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்
 
அணியியல் - முன்னுரை தோற்றுவாய் 
 
பதிப்பாசிரியர் முகவுரை
 
vi
 

இவ்வணியியல் விரைவில் செம்மையாக வெளிவருவதற்குத் தேவைப்பட்டவற்றை எல்லாம் அகமகிழ்வோடு செய்துவரும் தஞ்சை சரசுவதிமகாலின் இந்நாள் கௌரவ காரியதரிசி திருவாளர் வித்துவான் அ. வடிவேலனார்அவர்களுக்கும், அந்நூல்நிலையத் துணைக்காப்பாளர் திரு. சீராளன், B.A.அவர்களுக்கும் என் உளங்கனிந்த நன்றியைத் தெரிவிக்கும் கடப்பாட்டினேன்.

இப்பதிப்பிற்கு வழக்கம்போல் பல்லாற்றானும் உதவியுள்ள என் உடன்பிறந்தோர்களும் பழுத்த தமிழ்ப்புலமை வாய்ந்தவர்களுமாகியதிரு. வித்துவான் கங்காதரன், M.A,உள்ளிட்ட நால்வருக்கும் என் கனிவான ஆசிகள்.

இந்நூலை விரைவில் செம்மையாகப் பதிப்பித்து அளித்துள்ள குடந்தை ஜெமினி அச்சகத்தின் உரிமையாளருக்கும், அந்நிறுவனத்தில் பணிபுரியும் அலுவலர் அனைவருக்கும் என் நன்றி.

என் அயர்வான் இப்பதிப்பில் ஏற்பட்டிருக்கக் கூடிய பிழைகளைப் பொறுத்தருளுமாறு தமிழ் கூறு நல்லுலகத்துக்கு என் பணிவான வேண்டுகோள்.

தோன்றாத் துணையாய் என்னை இந்நற்பணிக்கண் உய்க்கும் ஐயாறன் அடியிணை இறைஞ்சி என் தமிழ்ப் பணியினைத் தொடர்கிறேன்.

 
46, மேல மடவளாகம்,
திருவையாறு.
 
தி. வே. கோபாலையர்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 01:34:24(இந்திய நேரம்)