தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட்டியல் - பிற்சேர்க்கை 2
449


இருபாஇருபஃது, முலைப்பத்து, நயனப்பத்து
 

‘வெள்ளைமுன் அகவல்பின் விரவ இருபான்
இயம்புவது இருபா இருபஃது; இணைந்து
மன்னு பயோதரம் அம்பகம் இவற்றை
ஆசிரிய விருத்தம் கலித்துறை ஒன்றின்
ஏற்கவரு ணித்து ஈரைந்து சொல்வது
அப்பெயர்ப் பத்துஎன அறைந்தனர் புலவர்.’
 

15

தசாங்கப்பத்து, சின்னப்பூ
 

‘வெள்ளை பத்தில் தசாங்கத்தைப் புகழ்ந்து
பகர்தல் தசாங்கப் பத்தாம்; அவற்றைத்
தொண்ணூறு எழுபஃது ஐம்பான் வெள்ளையில்
அமைவுற மொழிதல் ஆகும்சின் னப்பூ.’ 
 

16

குடை கோல் நாடு ஊர் சிலை வாள் வேல் பரி யானை

விருத்தங்கள்
 

‘எழிற்குடை செங்கோல் நாடுஊர் சிலைவாள்
அணிவேல் பரிதந்தி இவற்றைத் தனியே
அகவல் விருத்தம்ஈ ரைந்தின் மேவ
உரைக்கின் அவ்வவ் விருத்தம் ஆகும்.’ 
 

17

ஊசல்
 

‘ஆசிரிய விருத்தம் கலித்தா ழிசையில்
ஒன்றா ஒன்பான் தாழிசை போக்கின்
சுற்றத் தளவில் சொல்லுவது ஊசல்.’ 
 

18

வருக்கமாலை
 

‘மொழிமுதல் உயிர்மெய் வருக்கத்தொகை போற்றி
அகவலால் புகல்வது வருக்க மாலை.’
 

19


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2017 18:41:34(இந்திய நேரம்)