Primary tabs
வருக்கக் கோவை
அடைவில் வருபொருள் துறையில் கலித்துறை
வழுத்தும் இயல்பது வருக்கக் கோவை.
9
அகப்பொருட் கோவை
கருதிநா னூறு கலித்துறை யாகக்
காதல் அன்புறு காந்தருவ மணத்தில்
கொடிச்சியும் ஊரனும் குலவுநெறி நடப்பது
அகப்பொருட் கோவை ஆம்என மொழிப.
10
இரட்டைமணி மாலை
இருபது வழுத்துவது இரட்டைமணி மாலை.
11
இணைமணி மாலை
இணைய இயம்புவது இணைமணி மாலை.
12
மும்மணிக்கோவை
முப்பது விரவின் மும்மணிக் கோவை.
13
ஒலி அந்தாதி
ஓங்கிய முப்பான் ஒலியந் தாதி.
14