Primary tabs
447
கலம்பக உறுப்புக்கள்
குறம்மறம் களிமயக்கு ஊசல் வண்டுஊர்
சித்துஇரங் குதல்சம் பிரதம் தழைபாண்
கைக்கிளை தூதுஇவை கலம்பகக் கூற்றே.
4
கலம்பக இலக்கணம்
வண்ணம் முன்னுற வருமுதல் உறுப்பு
வினவின் ஒருபோகு வெண்பாக் கலித்துறை
அகவல் விருத்த மாயும்வேறு அகவல்
வெண்பாக் கலித்துறை ஆசிரியம் வஞ்சித்துறை
மருட்பா வெண்டுறை வஞ்சி கலியினம்
இவற்றை அந்தாதித்து இயம்பிய கூற்றால்
கலந்து பாடுவது கலம்பகம் என்ப.
5
கலம்பகச் செய்யுட்டொகை
பார்ப்பார் அரசர் தொண்ணூறு அமைச்சர்
எழுபஃது ஐம்பான் வைசியர் ஆறைந்து
சூத்திரர் பெறுவரெனச் சொற்றனர் புலவர்.
6
பன்மணி மாலை
ஒருபோகு என்பன ஒழியச் சிறப்பித்து
அந்தா தித்துநூறு அறைவது பன்மணி
மாலை என்ப மாண்புஉணர்ந் தோரே.
7
வெண்பா அந்தாதி, கலித்துறை அந்தாதி
அந்தாதித்து அப்பெயர் அந்தாதி ஆகும்.
8