தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட்டியல் - பிற்சேர்க்கை 2

453



மாலை, மஞ்சரி, சதகம் முதலியன

‘கருது பொருள்இடம் காலம் தொழிலின்

முப்பான் நாற்பான் எழுபான் தொண்ணூறு

நூறான் வெண்பாக் கலித்துறையின் ஆதல்

மன்னும்அவ் வெண்ணான் மாலை மஞ்சரி

காஞ்சி மாலை முல்லைக்கவி சதகமென்று

இயலும் செய்யுட்கு ஏற்ற பெயரே.’

34

வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை,

தும்பை, வாகை, தானை மாலைகள்

‘வெட்சி நிரைகொள்ளல்; தவிர்த்தல் கரந்தை;

மாற்றார் பாற்செலல் வஞ்சி; ஊன்றல்

காஞ்சி; மதிலைக் காத்தல் நொச்சி;

சுற்றல் உழிஞை; தும்பை பொருதல்;

வென்று மிகுபுகழ் விளைத்தல் வாகை;

தானையை விரித்தல் தானை மாலை;

இவைஒன்பதும்,

எப்பாட் டானும் முப்பஃது இயம்பின்

அப்பெயர் வருக்கத்து அவ்வம் மாலை.’  

35

தாரகை மாலை

‘தாரகை இருபத் தேழையும் தகைபெற

சொல்லணி வகுப்பில் தூசி அணிதக

வழுத்துதல் தாரகை மாலை என்ப.’

36

தசபிராதுற்பவம்

‘பகர்தசப் பிராதுற் பவம்பத் தான

அரிபிறப்பு ஆசிரிய விருத்தம் பத்தால்

வாழ்கென வாழ்த்துதல் மரபா கும்மே.’

37



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 03:15:19(இந்திய நேரம்)