Primary tabs
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்
நாழிகை வெண்பா
‘ஈசற்கு மண்ணாள் மன்னற்குஎண் ணான்கு
திருந்துநா ழிகையின் சிறப்பைவெண் பாவால்
நவில்வது ஆகும் நாழிகை வெண்பா.’
38
செருக்கள வஞ்சி, வரலாற்று வஞ்சி,
ஆனைத்தொழில்
‘செருக்கள வஞ்சி செருக்களம் கூறல்;
வரலாற்று வஞ்சிபல் வரலாறு ஓதல்;
பொருமதக் களிற்றைப் பொருநர் எதிர்கண்டு
ஆடலிற் சேர்த்தல் ஆனைத் தொழில்;இவை
ஆசிரியம் வஞ்சியில் அமைவ வாமே.’
39
பரணி
‘படைபுக்கு ஆயிரம் பகடுஅற ஒன்னார்
போரில் எதிர்ந்து பொரும்அர சனுக்குக்
கடவுள் வாழ்த்து, கடைதிறப்பு, பாலை
நிலம், காளி கோட்டம், நிலையிய கழுது,
காளிக்குப் பேய்சொலல், பேய்க்குக் காளிசொலல்,
அதனால் தலைவன் கீர்த்தியை அருளுதல்,
அவன்செலல், புறப்பொருள் தோன்றஆர்ப் பரித்துப்
போராடல், பொருகளம் விரும்பல் இவற்றை
நாற்சீர் ஆதியின் நண்ணும்ஈ ரடியின்
ஏறாது பரணி இயம்புதல் நெறியே.’
40
பெருங்காப்பியம்
‘பெருங்காப் பியநிலை பேசுங் காலைப்
பாடுநெறி வணக்கம் பரவுவாழ்த்து இவற்றினொன்று
ஏற்புடைத் தாக முன்வர இயன்று
நாற்பொருள் நயக்கும் நடைநெறித் தாகித்
தன்நிகர் இல்லாத் தலைவன் மலைகடல்