தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட்டியல் - பிற்சேர்க்கை 2

455



நாடுநகர் பருவம் நீடும் இருசுடர்த்

தோற்றம்என்று இனைய தொகுதியில் புனைந்துபெண்

வேட்டல்முடி கவித்தல் பூம்பொழில் நுகர்தல்

புனலாடல் கள்ளுண்டல் மகிழ்தல் ஊடல்

புதல்வரைப் பெறுதல் கலவியில் களித்தல்

இன்ன செய்கையின் நன்னடைத்து ஆகி

மந்திரம் தூது செலல்போர் வென்றி

சந்தியில் தொடர்ந்து சருக்கம் இலம்பகம்

பரிச்சே தம்எனும் பான்மையின் விளங்கி

நெருங்கிய சுவையும் பாவமும் விரும்பக்

கற்றவர் புனையும் பெற்றியது ஆமே.’ 

 

41

புராணம்

‘கூறும் அதில்சில குறைபாடு எனினும்

பெருங்காப் பியத்தின் பிறிதுஎனல் ஆகா

அறம்பொருள் இன்பம்வீடு அவற்றின்மே லாம்அவ்

அறம்முதல் நான்கினும் அல்கப் பெறுவது

காப்பிய புராணமாய்க் கருதப் பெறுமே.’

42

நூல்பெயர் எய்தும் முறை

‘ஆசுஇல் முதல்நூல் பொருளோடு அளவு

தன்மை மிகுதியே செய்வித்தோன் கருத்தன்

இடுகுறி இவற்றால் எய்தும் பெயரே.’

43

கையறத்துக்கு ஆகாத பா

‘கலியும் வஞ்சியும் கையறம் உரைத்தற்கு

ஆகா என்ப அறிந்திசி னோரே.’

44

வாழ்த்துக்கு உரிய பா

   ‘எவையும்வாழ்த் தினுக்கா மேவும் பாவே’  

45



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 03:15:42(இந்திய நேரம்)