தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU

456    

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


நான்கு பாவிற்கும் சாதி வரையறை

‘வெண்பா முதல்நாற் பாவும்அவ் வவற்றோடு

ஒத்து நடைபெறும் ஒருமூன்று இனமும்

மறையவர் முதல்நால் மரபின்வந் தோர்க்கு

ஆம்மரபு என்ப அறிந்திசி னோரே.’ 

46

நான்கு பாவிற்கும் நிலம், நிறம், நாள் - என்பன

‘முல்லை குறிஞ்சி மூசு மருதம்

நெய்தல் என்ன எய்தும்நா னிலமும்

திகழும் வெண்மையும் செம்மையும் பொன்மையும்

கருமையும் ஆகக் கருதும்நால் நிறமும்

அறுமீன் கொடுநுகம் அநுடம் அவிட்டம்

என்னும் நான்கும்என்று இன்னவை முறையே

வெண்பா முதலா மேவும்நாற் பாவும்

கொள்ளும் மரபாம் குறிக்குங் காலே.’

47

நான்கு பாவிற்கும் உரிய இராசி

‘ஆசிரியம் வஞ்சி கலிவெண் பாஎன்று

இம்முறை யால்வைத்து இயம்புங் காலை

மீனம் கடகம் தேளே என்றும்

சிங்கம் தனுவே மேடம் என்றும்

இடபம் கன்னி மகரம் என்றும்

துலாத்தொடு குடமே மிதுனம் என்றும்

ஒட்டிய ராசிமரபு ஓர்தல் நெறியே.’

48

நான்கு பாவிற்கும் உரிய கோள்கள்

‘மதிகுரு வெள்ளை; செங்கதிர் செவ்வாய்

இன்அகவல்; புகர்வஞ்சி; புந்திசனி கலியே

கோளமை நாற்பாவும் கொள்ளும் மரபே.’ 

49


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 03:15:51(இந்திய நேரம்)