Primary tabs
463
சானவியுடன் காரும் ஆம்;
சகரமொடு சகர ஆகாரம் மணிபால்சுதை,
தருவேழமே சி-சீ-க்கு,
சாற்றிய சு-சூமுதல் ஐந்துக்கும் உறும்பூவை,
சாதரூபம் சீர் சொ-சோ;
தெரி ஞ-ஞாவுக்கு அமுதம்ஆழி; த-தாவைத்திருத்
திகிரியே பொருந்தும்,
தி-தீஎனும் சொல்லுக்கு நீரே, து-தூ-ஐந்து
செல்வமும், வேலைத் தொ-தோ;
சீர்மதி ந-நாமுதல் ஆறும்உலகம் எய்துமே,
சீர் நி-நீ ஆதி ஆகும்,
சேருமே நு-நூச்சொல், நெ-நே-நை அமுதம்மணி
சிந்து, நொ-நோ அமுதமாம்;
பரவு ப-முதல்நான்கும் பூதரணிதேர், பு-பூ பார்
பொன்சொல், பெ-பே உறும்
பார்தருவும்; மகரம் முதல் நான்கு பூ, மு-மூ பூ
பாரும்; மெ-மே-மை பிறைஆம்,
பகர் மொ-மோபிறை; ய-யா சீர், யு-யோ புவி;வ-வா
பங்கசைதேர், வி-வீக்குப்
பதுமை, பின்நான்கிற்கும் மதிஅணி, எனத்தேர்ந்து
பாவலர்கள் உரைசெய்வரே.’
3
பிரபந்த வகைகள்
‘சாதகம் பிள்ளைக்கவி பரணி கோவை அர
சன் விருத்தம் தொகைநிலை
சாரும் ஐந்திணை எண்தரும் செய்யுள் அங்கமொடு
தானை அநுராகம் நாமம்