Primary tabs
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்
புலவர் கூறுவன
‘ஆசுமதுரம் சித்ரம் வித்தார நாற்கவியின்
ஆனவெண்பா முதலின் இனம்
ஆகிய வினைப்பதம் ஒலிப்பதம் பெயர்வினை
ஆரும் உயர்திணை அஃறிணை
மாசிலா ஒருமைபன்மை தன்மை முன்னிலை
மாட்சி அளபெடை காலமும்
வளம்உறும் உயிர்ச்சந்தி மெய்ச்சந்தி பகுபதம்
வரும் ஆரியம் தேசிகம்
தேசுமிகும் வல்இடை மெல்லினம் குறில்நெடில்
சீரான உயிர்மெய்களும்
செப்பு குற்றியலுகரம் ஆதிய குறுக்கம்
சிறந்திடும் தலைவி தலைவன்
பேசரிய நவரதம் விருத்தி பாகம் நீதி
பின்பு பொருளணி அக்கரம்
பிறப்பு வினைமுற்றுப்பெயர் முற்றொடும் அறிந்துவகை
பேசுவர்கள் புலவோர்களே.’
2
மங்கலப் பொருத்த விளக்கம்
‘அரியதமிழ் பத்துப் பொருத்தங்களைத் தெரிந்து
அபிதானமாம் பொருத்தம்
அகரம்முதல் நான்கிற்கும் முந்நீரது ஆகுமே;
அஆ இரண்டினுக்கும்
அருமணிகடல் காருடன் பூஎய்துமே
ஆம்; உஊமுதல் ஐந்தினுக்கு
ஆனபொன் நேமியும், ஞகரம்முதல் மூன்றுக்கும்
ஆழி நீர் கார் பொருந்தும்;
தரு க-காவின்சீர், கி-கீக்குஉறும் சீர்வேலை
தானே,
கு-கூ-சொல் ஆகும்,