Primary tabs
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்
ஊட்டுதசை புட்குதவு வேலும் அவ்வேல்தலையும்
ஒன்றாக ஓங்குவதுபோல்
ஊன்று கோலொடு விளக்கு ஒன்றுபட்டு ஓங்குமாறு
ஓங்குதல் விளக்குநிலை66 யாம்;
நாட்டந்தனைத் தசச்செய்யுளால் கூறல்நய
னப்பத்து67 எனப்புகலுவார் ;
நனிமுலையைத் தசச்செய்யுளால் கூறுவது
நற் பயோதரப்பத்து68 இதே.
23
அரசன் விருத்தம், தசாங்கத்தயல், பாதாதி கேசம்,
கேசாதி பாதம், அலங்கார பஞ்சகம்
‘பத்துக் கலித்துறையும் முப்பது விருத்தமும்
பகர்கலித் தாழிசையுமாய்ப்
பகர்நாடு மலைகடல் நிலவருணனை நீடு
பரவுதோள் வாள்மங்கலம்
பெற்றிடப் பாடி முடிவேந்தர்க்கு உரைப்பதாய்ப்
பேசல் அரசன் விருத்தம்69 ;
பெறும்மன் பல்அங்கத்தை ஆசிரியம் ஈரேழு
பேசல் தசாங்கத்தயல்70 ;
உற்றஅடி முடிவரை கலியின் வெண்பாவினால்
ஓதல் பாதாதிகேசம்71 ;
ஒளிரும்முடி அடிவரை கலியின் வெண்பாவால்
உரைத்தல் கேசாதிபாதம்72 ;
அத்தகு ஆசிரிய விருத்தம் கலித்துறை
அகவல் சந்தவிருத்தமும்
ஆம்வெள்ளையும் மாறி அந்தாதி செயும்நூறு
அலங்கார பஞ்சகம்73 மே.
24