Primary tabs
479
கடைநிலை, கையறுநிலை, தசாங்கப்பத்து
‘தவமுனிவர் சேணிடை வருதலால் பிறர்வருத்
தம் தீர வாயில்காப்போய்
தலைவற்கு என்வரவு இசைஎனக் கடைக்கண் நின்று
சாற்று எனச்சொல் கடைநிலை74 ;
அவனியில் கணவனோடு இல்லாள் கழிந்துழி
அவர் சுடப்பட்ட அழிவின்
அப்பொருள்எலாம் பிறர்க்கு அறிவுறுத்தித் தானும்
அப்போது இறந்தேபடா
தெவர்தாம் ஒழிந்த ஆயத்தார்களும் பரி
சில் பெறும் விறலியோரும்
செயல்தனிப்படர் உழந்திடு செயலின் அறுநிலை
செப்பிடும் கையறுநிலை75 ;
பவனம்உறும் அரசனுக்கு ஒத்திடு தசாங்கமும்
பாடு நேரிசைவெள்ளையால்
பத்துச்செய்யுள் கூறலதுவே தசாங்கம் உறு
பத்து76 என உரைப்பார்களே.
25
பதிகம், குழமகன், மங்கலவள்ளை, நாற்பது
ஒருபொருள் தனைக்குறித்துப் பகர்செய்யுள் பதிகம்77 ;
ஓதல் கலிவெண்பாவினால்
உயர்பெண்கள் தம்கையில் கண்ட இளமைத்தன்மை
உடைய குழமகனைப் புகழ்ந்து