Primary tabs
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்
ஓதல் குழமகன்78 ஆகும்; உயர்குலப்பெண்ணினை
ஒன்பது வகுப்பின் வெண்பா
ஒன்பது செய்யுள் செய்வதாகும் மங்கலவள்ளை;79
உற்றிடும் காலம் இடமும்
பொருளும் ஆகிய இவற்றுள்ளின் ஒவ்வொன்றினைப்
பொருந்தி நாற்பது வெள்ளையால்
புகல்வதே நாற்பது80 ஆகும்; ஆண்பாலுள் மாதர்பால்
போதும் அவரவர் காதலை..................
26
[இப்பாடலின் ஈற்றடியும் எஞ்சிய பாடல்களும்
அகப்பட்டில. இப்பாடல்களில் 80
பிரபந்தங்களின் இலக்கணங்களே
சுட்டப்பட்டுள்ளன. எஞ்சிய பாடல்கள் இன்னும்
4 இருந்திருக்கலாம். இவையும்
இருந்திருப்பின் 30 பாடல்களைக்கொண்ட
இந்நூல் 96 வகைப் பிரபந்த இலக்கணமும்
எஞ்சாது கூறியிருக்கும்.]