தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

484 இலக

484
இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்

பண்ணைச் செயல் வினவல், அவன் அது கூறல், ஆயரை வருவித்தல்,
அவர் வரல், அவர் பெருமை கூறல், மூத்த பள்ளி முறையீடு,குடும்பன்கிடையிருந்தான் போல வரல், அவனைத் தொழுவில்
மாட்டல், அவன் புலம்பல், மூத்த பள்ளிஅடிசில் கொடுவரல், அவன்
அவளோடு கூறல், அவன் அவளை மன்னித்தல் கேட்க வேண்டல், அவள்
மறுத்தல், அவன் சூளுறல்,அவள் அவனை மீட்கவேண்டிப் பண்ணைத்
தலைவனைப் பரவல்,விதைமுதலிய வளம் கூறல், உழவர் உழல், காளை
வெருளல், அது பள்ளனைப் பாய்தல், பள்ளிகள் புலம்பல், அவன் எழுந்து
வித்தல், அதைப்பண்ணைத்தலைவற்கு அறிவித்தல், நாறுநடல், விளைந்த
பின் செப்பம் செயல், நெல் அளத்தல், மூத்த பள்ளி முறையீடு, பள்ளிகளுள்
ஒருவர்க்கு ஒருவர்ஏசல் என இவ்வுறுப்புக்கள் உறப்பாட்டுடைத்தலைவன்
பெருமை ஆங்காங்குத்தோன்றச் சிந்தும் விருத்தமும் விரவி வர
இவற்றால்பாடுவது. 

15.  உழிஞை மா :

மாற்றாரது ஊர்ப்புறம் சூழ உழிஞைப் பூமாலை சூடிப் படை
 வளைப்பதைக் கூறுவது. 

16.  உற்பவ மாலை :

திருமால் பிறப்புப் பத்தினையும் ஆசிரிய விருத்தத்தால் கூறுவது.

17.  ஊசல் :

ஆசிரிய விருத்தத்தான் ஆதல் கலித்தாழிசையான் ஆதல்
சுற்றத்தோடும் பொலிவதாக ஆடீர் ஊசல், ஆடாமோ ஊசல் எனச் செய்யுள்
தோறும்முடிக்கும் சொல்வரப் பாடுவது.

18.  ஊர் நேரிசை :

பாட்டுடைத்தலைவன் ஊரினைச் சார நேரிசை வெண்பாவால்
 தொண்ணூறேனும் எழுபதேனும் ஐம்பதேனும் பாடுவது.
 


புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 03:20:09(இந்திய நேரம்)