Primary tabs
19. ஊர் வெண்பா :
வெண்பாவால் ஊரைச் சிறப்பித்துப் பத்துச் செய்யுள் கூறுவது.
20. ஊரின்னிசை :
பாட்டுடைத்தலைவன் ஊரினைச்சார இன்னிசை
வெண்பாவால்
தொண்ணூறேனும் எழுபதேனும் ஐம்பதேனும்
பாடுவது.
21. எண் செய்யுள் :
பாட்டுடைத்தலைவனுடைய ஊரினையும் பெயரினையும்
பத்து முதல்
ஆயிரம் அளவும் பாடி எண்ணால் பெயர்
பெறுவது.
22. எழு கூற்றிருக்கை :
ஏழு அறை ஆக்கிக் குறுமக்கள் முன்னின்றும்
புக்கும் போந்தும்
விளையாடும்பெற்றியால் வழுவாமையால்
ஒன்று முதலாக ஏழ் இறுதியாக
முறையானே பாடுவது.
23. ஐந்திணைச் செய்யுள் :
புணர்தல் முதலிய ஐந்து உரிப்பொருளும்
விளங்கக் குறிஞ்சி முதலிய
ஐந்திணையினையும் கூறுவது.
24. ஒருபா ஒருபஃது :
அகவலும் வெண்பாவும் கலித்துறையும் ஆய
இவற்றில் ஒன்றால்
அந்தாதித் தொடையால் பத்துப் பாடுவது.
25. ஒலியலந்தாதி :
பதினாறுகலை ஓரடியாக வைத்து, இங்ஙனம்
நாலடிக்கு
அறுபத்துநான்கு கலைவகுத்துப் பல சந்தமாக
வண்ணமும் கலை வைப்பும்
தவறாமல் அந்தாதித்து முப்பது செய்யுள்
பாடுவது; சிறுபான்மை எட்டுக்
கலையானும் வரப்பெறும்.அன்றியும் அகவல்
வெண்பா கலித்துறை ஆகிய
இம்மூன்றையும்பப்பத்தாக அந்தாதித்துப்
பாடுவதும் ஆம்.