தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU


பாட்டியல் - பிற்சேர்க்கை 4
487

31.  காப்பியம் :

அறம் பொருள் இன்பம் வீடு எனும் நான்கனுள் ஒன்றும் பலவும்
குறைந்து ஏனைய உறுப்புக்கள் மேல் (பெருங்காப்பியம்) கூறியவாறு
இயல்வது.

32.  காப்புமாலை :

தெய்வம் காத்தலாக மூன்று செய்யுளானும், ஐந்து செய்யுளானும், ஏழு செய்யுளானும் பாடுவது.

33.  குழமகன் :  

கலிவெண்பாவால் மாதர்கள் தம் கையில் கண்ட இளமைத் தன்மை
உடைய குழமகனைப் புகழ்ந்து கூறுவது.

34.  குறத்திப்பாட்டு :

தலைவன் பவனி வரவு, மகளிர் காமுறுதல், மோகினி வரவு, உலாப்
போந்த தலைவனைக் கண்டு மயங்கல், திங்கள் தென்றல் முதலிய உவாலம்பனம், பாங்கி உற்றது என் என வினவல், தலைவி பாங்கியோடுஉற்றது கூறல், பாங்கி தலைவனைப் பழித்துக்கூறல், தலைவி தலைவனைப புகழ்ந்துகூறல், தலைவி பாங்கியைத் தூது வேண்டல், தலைவி பாங்கியோடுதலைவன் அடையாளம் கூறல், குறத்தி வரவு, தலைவி
குறத்தியைமலைவளம்முதலிய வினவல், குறத்தி மலைவளம் நாட்டுவளம்
முதலிய கூறல்,தலைவன் தல வளம் கிளைவளம் முதலிய கூறல், குறி
சொல்லி வந்தமைகூறல்,தலைவி குறி வினவல், குறத்தி தெய்வம் பராவல்,
குறி தேர்ந்து நல்வரவுகூறல்,தலைவி பரிசில் உதவி விடுத்தல், குறவன் வரவு,
புள் வரவு கூறல்,கண்ணிகுத்தல், புட்படுத்தல், குறத்தியைக் காமுற்றுத்
தேடல், குறவன்பாங்கனொடு குறத்தி அடையாளம் கூறல், குறவன்
குறத்தியைக்கண்ணுறல்,குறவன் அணி முதலியகண்டு ஐயுற்று வினவலும்
ஆட்டாண்டு குறத்தி விடை கூறலுமாகக் கூறல் - பெரும்பான்மையும் இவ்வகைஉறுப்புக்களால்,அகவல், வெண்பா, தரவு கொச்சகம்,
கலித்துறை,கழிநெடில்விருத்தம், கலிவிருத்தம் இச்செய்யுள்
இடைக்கிடைக்கூறிச்சிந்து முதலிய நாடகத் தமிழால் பாடுவது.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 03:20:34(இந்திய நேரம்)