Primary tabs
491
54. நவமணிமாலை :
வெண்பா முதலாக வேறுபட்டபாவும் பாவினமுமாக
ஒன்பது செய்யுள்
அந்தாதித்துப் பாடுவது.
55. நாமமாலை :
அகவலடியும் கலியடியும் வந்து மயங்கிய
வஞ்சிப்பாவால்
ஆண்மகனைப் புகழ்ந்து பாடுவது.
56. நாற்பது :
காலமும் இடமும் பொருளும் ஆகிய இவற்றுள்
ஒன்றனை நாற்பது
வெண்பாவால் கூறுவது.
57. நான்மணிமாலை :
வெண்பாவும் கலித்துறையும் விருத்தமும்
அகவலும் அந்தாதித்
தொடையாக நாற்பது பாடுவது.
58. நூற்றந்தாதி :
நூறு வெண்பாவினாலேனும் நூறு
கலித்துறையினாலேனும் அந்தாதித்
தொடையால் கூறுவது.
59. நொச்சி மாலை :
புறத்து ஊன்றிய மாற்றாருக்கு ஓடலின்றி
நொச்சிப் பூமாலை
சூடித்தன்மதில் காக்கும்திறம்
கூறுவது.
60. பதிகம் :
ஒரு பொருளைக் குறித்துப் பத்துச் செய்யுளால் கூறுவது.
61. பதிற்றந்தாதி :
பத்து வெண்பா பத்துக் கலித்துறை
பொருட்டன்மை தோன்ற
அந்தாதித்துப் பாடுவது.