Primary tabs
493
68. பிள்ளைக்கவி :
காப்பு, செங்கீரை, தால், சப்பாணி,
முத்தம், வாரானை, அம்புலி,
சிறுபறை, சிற்றில், சிறுதேர் இவற்றை
முறையே அகவல் விருத்தத்தால்
பப்பத்தாகக்கூறுவது ஆண்பால்
பிள்ளைக்கவி. இவ்வுறுப்பினுள்
கடை
மூன்றுஒழித்துக் கழங்கு, அம்மானை,
ஊசல் என்பவற்றைக்
கூட்டிமேற்சொல்லியவாறு கூறுவது
பெண்பாற்
பிள்ளைக்கவியாம்.
69. புகழ்ச்சிமாலை
:
அகவலடியும் கலியடியும் வந்து மயங்கிய
வஞ்சிப்பாவால் மாதர்களது
சீர்மையைக் கூறுவது.
70. புறநிலை :
நீ வணங்கும் தெய்வம் நின்னைப்
பாதுகாப்ப நின் வழி வழி
மிகுவதாக எனக் கூறுவது.
71. புறநிலை வாழ்த்து :
வழிபடு தெய்வம் நிற்புறங்காப்பப்
பழிதீர் செல்வமொடு ஒருகாலைக்கு
ஒருகால் சிறந்து பொலிவாய் என வெண்பா
முதலும் ஆசிரியம்
இறுதியுமாகப்பாடுவது.
72. பெயர் நேரிசை :
பாட்டுடைத்தலைவன் பெயரினைச் சார
நேரிசை வெண்பாவால்
தொண்ணூறேனும், எழுபதேனும்,
ஐம்பதேனும் பாடுவது.
73. பெயரின்னிசை :
பாட்டுடைத்தலைவன் பெயரினைச் சார
இன்னிசை வெண்பாவால்
தொண்ணூறேனும், எழுபதேனும்,
ஐம்பதேனும் பாடுவது.