Primary tabs
vii
இவ்வாறு பல திருத்தங்கள் செய்யப்பட்டிருப்பினும் நூல் செம்மையாக அமைந்துவிட்டது என்று கூறமுடியாது. இன்னும் திருத்தம் செய்யவேண்டிய இடங்கள் பல உண்டு. அவை பதிப்பில் ஆங்காங்கே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
கே. ப. பிரதி ஓலைச்சுவடியில் உள்ளது முழுமையும் பார்க்க முடியாவிடினும் நூலுக்குள் உள்ள முரண்களைக் காண முடிகிறது. அவை பதிப்பில் ஆங்காங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. உரையும் திருத்தம் செய்யவேண்டிய நிலையில் உள்ளது.
இந்நிலையில் பதிப்பாசிரியருக்கு ஒரு சிக்கல் தோன்றுவது இயல்பே. மூலத்தில் உள்ளது உள்ளவாறே பதிப்பிப்பதா அல்லது திருத்திப் பதிப்பித்து மூல பாடத்தை அடிக்குறிப்பில்