Primary tabs
xix
உள்ளவும் இல்லவும் ஆம் இருவழக்கினும் (நன். 401.)
தற்கும் இல்லதற்கும் ஒரோவழி (இ. வி. 312)
ஆயினும் சுவாமிநாதம்
‘இனம் உளபண்பாம் வழக்கில் இலதாம் செய்யுளுக்கே’ என்று செய்யுளுக்கே உரியதாக மட்டும் கூறிச்சென்றது தொல்காப்பிய உண்மையைப் புறக்கனிக்க முடியாத காரணத்தினால் ஆகும். ஆனால் மொழிப் பயிற்சி அடிப்படையில் நோக்கினால் எல்லாவற்றிற்குமே வருவது என்பதே சரியாக அமையும்.
5. 1. 2. நேமிநாதமும் சுவாமிநாதமும்
நேமிநாதத்தைப் பொருத்தவரையில் அது கூறிய முறையே சாமிகவிராயரை ஈர்த்திருக்கிறது. கருத்தளவில் தொல்காப்பியமே இரண்டிற்கும் மூலமாக அமைந்துள்ளது.
உயர்திணைப் பெயர்களை ஒவ்வொரு இலக்கண ஆசிரியரும் ஒவ்வொருவிதமாக விளக்கிச் சொல்லியுள்ளார்கள். தொல்காப்பியர் கருத்தைத் தொகுத்துப் பொதுமையாகக் கூறும் முறையில் நேமிநாதார்
சுட்டே வினா ஒப்பே பண்பே தொகுனளர ஒட்டுப்பேர் எண்ணியற்பேற்............(நேமி. 30-1.2) என்று கொடுத்துள்ள விளக்கத்தை ஒட்டியே
சுட்டு, வினா, விடைச்சொல், உவமையினும் தூண்டுபெயர் ஈறுனளர... ..................(சுவாமி 39.1,2) என்று சாமிகவிராயர் அமைத்துக் கொண்டுள்ளார் என்பது எளிதில் விளங்கும்.