Primary tabs
xxv
(இ. வி. 270), தஞ்சம் (இ. வி. 271) ஆகியவற்றைச் சுவாமிநாதம் (55) கூறியது, பெயர்ச் சொற்களின் பால்பாகுபாடு பற்றிப் பேசும்போது தெய்வம், பேடு போன்றவை உயர்திணையிடத்து உரிய பாலாய் வேறுபட்டு இசைக்கும் என்றது ஆகியவை உதாரணங்களாகும்.
நன்னூலார் கூறாத புதிய விதிகளை இலக்கண விளக்கம் கூறியபோது அவற்றையும் சுவாமிநாதம் தழுவிக் கொண்டுள்ளது. இதற்கு மொழியில் ஏற்பட்டுள்ள புதிய மரபுகளையும் பிற்கால இலக்கண ஆசிரியர் ஏற்று இலக்கணம் எழுத வேண்டும் என்ற கோட்பாடே காரணமாக அமையும்.
நன்னூலார் முன்னிலை வினையைப் பற்றிக்
கூறும்போது
ஏவலின் வரூஉம் எல்லா ஈற்றவும் (335)
பின், ஏன், அல், ஆல், காண் முன்னிலை ஒருமை (50. 3, 4)
என்று தொகுத்துரைத்து விட்டார்.
இம் முறையிலேயே நன்னூலார் கூறாத வியங்கோள் விகுதிகளைச் சுவாமிநாதம் (51.4) இலக்கண விளக்கத்தைப் பின் பற்றி விளக்கியுள்ளது. இறந்தகால விகுதிகளில் ஒன்றாக ககரம் கூறப்பட்டிருப்பதும், இலக்கண விளக்கம் புதுமையாகக் கூறியதைத் தழுவியது ஆகும்.
நன்னூலும் இலக்கண விளக்கமும் கருத்து ஒத்திருந்த போதிலும் கருத்தைக் கூறு முறையில் சிறப்பாக அமைந்த