Primary tabs
xxvi
ஒரே காரணத்திற்காக இலக்கண விளக்கமே
சுவாமிநாதத்திற்கு ஆதாரமாக அமைந்த இடங்களும்
உண்டு. உதாரணமாக பெயர்ச் சொல்லை விளக்கும்போது
நன்னூலார் படர்க்கைப் பெயரும் ஏனைய
இடப்பெயர்களும் பொருள் உணர்த்து முறையை முன்னரும்
(265) மூவகை இடம் என்னென்ன என்பதைப் பின்னரும்
(266) கூறியுள்ளார்.
பெறப்படும் திணைபால் அனைத்தும்; ஏனை
இடத்தவற்று ஒருமை பன்மைப் பாலே (நன். 265)
தன்மை முன்னிலை படர்க்கை மூவிடனே (நன். 266)
ஆனால் இலக்கண விளக்கமோ இதே சூத்திரங்களை முன் பின்னாக மாற்றி (நன். 265-இ.வி. 167; நன். 266-இ.வி. 166) அமைத்துக்கொண்ட பாங்கிலேயே சுவாமிநாதமும் பேசுகிறது (36.1,2)
நன்னூலின் திருத்த நூலாக இலக்கண விளக்கத்தில்
ஏற்பட்ட ஈடுபாடு தனிப்பட்ட முறையிலும்
பெருகியிருக்க வேண்டும். அதனால் நன்னூல் கருத்தே
ஒத்துக்கொள்ளத்தக்கதாக இருந்தும் அதைத்
தள்ளிவிட்டு இலக்கண விளக்கத்தைப் பின்பற்றி
விட்டது ஓரிடத்தில்.
‘ணன முன்னும் வஃகான் மிசையும் மக்குறுகும்’ (நன். 96)
என்று கூறியதால், உண்ம், தின்ம் போன்ற இயல்பு ஈறான ணகர னகரங்களின் பின்னர் மட்டுமின்றி கொண்ம், சென்ம் போன்ற விதியீற்றின் பின்னரும் (ளகரமும் லகரமும் திரிந்து முறையே ணகரமாகவும் னகரமாகவும் மாறுதல்) மகரக் குறுக்கம் கொள்ள வழியிருக்கிறது. அந்த இரண்டு இடங்களிலும் மகரம் குறுகியே வருகிறது. ஆனால் இலக்கண விளக்கம் இரண்டாவது வகையான விதியீற்றில் மட்டுமே மகரம் குறுகும் என்றது குன்றக் கூறலாகவே அமையும்.