Primary tabs
xxxviii
என்ற இரண்டு கலைச்சொற்களைக் கூறுவதன் மூலம் மொழி
அமைப்பின் பண்பைச் சரியாகப்
புரிந்துகொண்டிருக்கிறார் என்ற உண்மையை மறைமுகமாக
வெளிப்படுத்திவிடுகிறார்.
சேர்புணர்ச்சி, புணர்ச்சியின்றாய் எழுத்து மொழி
தோன்றல் திரிதல், கெடல், மாறல் விகாரம். (27. 2,3)
என்று புணர்ச்சியால் மாறுபடுவதை புணர்ச்சி என்றும் புணர்ச்சி இல்லாமல் மாறுபடுவதை விகாரம் என்றும் பாகுபடுத்துவது கோட்பாட்டு நிலையில் அமைத்த புதுமையாகக் கருதலாம்.
ஆகுபெயர்க்குச் சாமிகவிராயர் தரும் விளக்கம் விரிவான தாகவும் சற்றுப் புதுமையாகவும் இருக்கின்றது.
தொல்காப்பியர் ஆகுபெயராக வரும் பெயர் உணர்த்தும்
பொருளுக்கும் சாதாரண நிலையில் அச்சொல் உணர்த்தும்
பொருளுக்கும் உள்ள தொடர்புகளை வகைப்படுத்திக்
கூறியுள்ளார். முதலில் கூறும் சினையறி கிளவி
(தொல். சொல். 114) என்பது போன்று
விளக்கியுள்ளார். இதை நேமிநாதர்
பொதுமைப்படுத்தி
தொன்முறை உரைப்பன ஆகுபெயரே (நன். 290)
சாமிகவிராயர் அத்தொடர்பு இனத்தொடர்பாக இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிறார்.