Primary tabs
XL
பொது உண்மை:
பெயரெச்சத்தின் இறுதியில் வரும் அகரம் (செய்த,
செய்கின்ற என்ற இருவகை வாய்பாட்டு
பெயரெச்சத்திலும் வருவது) அண்மைச்சுட்டு அகரமாகக்
கருதுகிறார்.
எட்டு ஒற்று அமையத்திரியும் பெயரெச்சம் (52.1,2)
என்ற வரிகள் இவ்வுண்மையை விளக்கும். சேய்மைச் சுட்டாக இருந்தாலும் சேய்மைச் சுட்டுப்பொருளில் வராது பிரதி பெயராக (Pronoun அதாவது Anaphoric pronoun) வருவது என்பதே பொருந்தும். எவ்வாறாயினும் பெயரெச்சத்தில் தொழிலும் காலமும் மட்டுமன்றி பிரதிப்பெயராக வருகின்ற தன்மையைக் குறிக்கவும் உருபு இருக்கிறது என்று கண்டு கூறிய உண்மை புதுமையானது.
இடைச்சொல்லை ஒன்பது வகையாகப்பிரித்துக்கூறியது (சுவாமி. 54) தனிச் சிறப்பாக அமையாவிட்டாலும் சாமிகவிராயர் தமிழ்மொழி
அமைப்பில் பொதுவாக சில மாற்றங்களை நினைத்துப் பார்த்துள்ளார் என்ற முறையில் சிறப்பானதாகக் கருதலாம்.
எட்டாம் வேற்றுமை பொருளாக செப்பு, ஏவல், வினைப்பயன் என்று மூன்றைக் குறிப்பிடுவதும் பொதுவான மொழி அமைப்பு உண்மையே. ‘செப்பு, ஏவல், வினைப்பயனும் எட்டாம் வேற்றுமைக்கே’ (சுவாமி. 44.4) என்பது அத்தொடர். ஆயினும் இதன் பொருத்தமும் விளக்கமும் தெளிவாக விளங்கவில்லை.
எழுத்துக்களுக்குரிய மாத்திரையை வரையறுத்துக் கூறிவிட்டு அம்மாத்திரை மிகுந்து ஒலிக்கும் இடங்களையும் இலக்கண ஆசிரியர்கள் குறிப்பிட்டுச் சென்றுள்ளார்கள். அவ்வாறு குறிப்பிட்ட மாத்திரை மிக்கு ஒலிக்கும் இடங்களாக இவர் ‘உறை மீட்டுனாவலும் குறிப்பிசையும் வரைவில வந்திடுமே’ (20.4) என்று கூறியது எல்லா மொழிக்கும்கூட பொருந்தும் உண்மையாகக் கொள்ளலாம்.