Primary tabs
XLiii
கொண்டு இகரத்தைச் சேர்த்துள்ளார். ஞேயம் என்பது சிவஞான சித்தியாரில் (11.2) வந்துள்ளது. எனவே ஏகாரத்தையும் சேர்த்து ஆறு உயிர் என்று குறிப்பிட்டு விட்டார்.
சொல்லியல்:
மூன்றாம் வேற்றுமைக்குச் சொல்லுருபாகக் ‘கொண்டு’ என்று கூறியதும் சங்க இலக்கிய வழக்கிற்கு இலக்கணம் கூறியதாகக் கருத வேண்டியுள்ளது. ஆயினும் இலக்கண ஆசிரியர்கள் கூறத் தவறியதை இவர் எடுத்துக் கூறியதால் பாராட்டுதற்குரியவராகிறார். ‘ஒரு கணை கொண்டு மூவெயில் உடற்றி’ (புறம்.55.2); ‘கோல் கொண்டு புடைக்கும் (ஐங். 275)’ என்ற வழக்குகள் சங்க இலக்கியத்திலேயே பயின்று வந்துள்ளன.
ஆறாம் வேற்றுமைக்குத் தொல்காப்பியர் ‘அது’ என்ற உருபை மட்டும் குறிப்பிட்டார். (தொல். 79) நன்னூலார் அது, ஆது என்ற இரண்டு உருபும் ஒருமைக்கு என்றும் ‘அ’ என்ற உருபு பன்மைக்கு என்றும் (நன். 300) பிரித்துப் பேசியுள்ளார். அக்கருத்தையே இலக்கண விளக்கமும் (203), தொன்னூல் விளக்கமும் (61), முத்து வீரியமும் (பெயரியல் 63) ஆதரித்துள்ளன. இவ்வாறு எண்ணிற்கேற்ப உருபு மாறுபடுவது என்பது தமிழ் மொழி அமைப்புக்கு மாறுபட்டது. இதை உணர்ந்தும் உடைய என்ற சொல்லுருபு சங்க காலத்திலிருந்து வழங்குவதை அறிந்தும் சாமிகவிராயர்
‘ஆறு அது, ஆது அவ்வுடைய உருபு’ (சுவாமி 43.2) என்று வரையறுக்காமல் குறிப்பிட்டுச் சென்றுள்ளார்.
உடைய என்ற சொல்லுருபு சிலப்பதிகாரம் (தம்முடைய தண்ணணி 7.32.1) மணிமேகலை (அணங்குடைய யாப்பு 3.57) ஆகிய நூல்களில் பயின்று வந்து பிற்காலத்தில் நிறையப் பயன் படுத்தப்பட்டுவந்துள்ளது.