தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Swaminatham


XLiv

நிகழ்கால இடைநிலையாக ‘கிற்று’ (சுவாமி. 25) என்று குறிப்பிடுவதும் பிற்கால வளர்ச்சியைத் தழுவியதாகும்.

பெயரிலும் வினையிலும் வரும் பால் காட்டும் விகுதிகளில் உள்ள ஆகார உயிர் ஓகாரமாக மாறி வருவது செய்யுளுக்கே உரியது என்று தொல்காப்பியர் (சொல். 195), நேமிநாதர் (சொல். 37), பவணந்தியார் (353), வைத்தியநாத தேசிகர் (இ.வி. 326), முத்துவீர உபாத்தியாயர் (மு.வீ. பெயரியல் 47) கூறியிருக்க சாமி கவிராயர் செய்யுளில் மட்டும் வரும் என்று வரையறுக்காது.

 
‘பெயர் வினையின் னளரய ஈற்றயலின் அ, ஆ ஓவாகும்’
 
(சுவாமி 64.1)

என்று கூறியுள்ளதால் வழக்கிற்கும் செய்யுளுக்கும் உரியதாகக் கொள்ள வேண்டும். பிற்காலக் கல்வெட்டுக்களிலும் ஓகார வடிவம் வழங்கியுள்ளதால் வழக்கினும் அவ்வழக்கு பயிலப்பட்டது என்பது புலனாகும். எனவேதான் சாமிகவிராயர் இடம் வரையறுக்காமல் கூறிச் சென்றிருக்க வேண்டும்.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 03:54:26(இந்திய நேரம்)