ழுஅத்தனையொத்துத் தவத்தோர்பலர்க்கும் அரசன் என்னும்
வித்தகப் பேர்பெற்று வீறார் பொதியையில் மேயமுனி
முத்தம்ஒப்பாள் அருளாற்செய்தது ஆம்தமிழ் மூதுலகத்து
எத்தகவோரையும் தேவர்தம் தேவர் எனச்செய்யுமேழு
(தமிழ் அலங்காரம் 96). இவ்வாறு கூறுவதாலேயே தமிழ்ச்
சுவை அறியாத் தெய்வம் இருக்கமுடியாது எனத்
தௌ¤வாகிறதுழு
(-பக்.461)
இத்தகு அரிய நூலுக்கு மரபு வழுவாமல் புத்துரை
எழுதிப் பதிப்பித்திருக்கும் புலவர் ப. வெ.
நாகராசன் அவர்களைப் பெரிதும் பாராட்டுகின்றேன்.
தமது வடமொழிப்புலமை, தத்துவ சமய நூற்புலமை
ஆகியவற்றுடன் தமிழ்ப் புலமையைக் குழைத்து அவர்
செய்திருக்கின்ற இவ்வுரை பல்லாற்றானும் சிறந்து
விளங்குகின்றமையை இந்நூலை ஓதுவார் அனைவரும்
உணர்வர். இவ்வுரையாசிரியர், இயல்பாகவே கௌமார
மடத்தின் தொடர்பும் ஈடுபாடும் கொண்ட சிறப்பால்
மிகுந்த ஈடுபாட்டுடனும் உழைப்புடனும் இவ்வுரையைச்
செம்மையாக்கியுள்ளார். நூலுடன் இணைந்த அகராதிகள்,
சாத்துகவிகள் முதலியன இந்நூலை மேலும் பொலிவு பெறச்
செய்கின்றன என்றால் அது மிகையாகாது.
இவ்வுரையாசிரியர் தமக்குத் தௌ¤வில்லாதவிடத்தில்
நேர்மையாக (சான்று : புலமையிலக்கணம்: 139)
ழுஇந்நூற்பாவில் இடம்பெற்ற வரலாறு விளங்கவில்லைழு
என வெளிப்படுத்தி, அவ்விடங்களிலெல்லாம் பிறரை ஆய்வு
செய்யத்தூண்டியிருப்பது சிறந்த பதிப்பறமாகப்
பாராட்டத்தகுவதாம்.
இப்பெரிய நூலைத் தமிழ்மொழியின் வாழ்வும் வளமும்
கருதித் தோற்றுவிக்கப்பெற்ற தமிழ்ப் பல்கலைக்கழகம்
வெளியிடுவதில் பூரிப்படைகிறது என்றால் அது
முற்றிலும் தகுவதாகும். தமிழ்ப் பெருமக்களும்
இந்நூலை வரவேற்று ஆய்வர் என நம்புகிறேன்.
27-10-1990 சி. பாலசுப்பிரமணியன்,