தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU-Library


பதிப்பு முன்னுரை
p08
தமிழ் இலக்கண வளர்ச்சி
 
தமிழின் இலக்கணம் மிகத் தொன்மையான ஒன்றாகும் தமிழில் இலக்கணம் என்றால் மொழி அமைப்பை மட்டும் கூறுதல் ஆகாது. மொழியோடு நூல்களின் வடிவம், நுதல் பொருள், மக்கள் வாழ்வு ஆகிய அனைத்துமே இலக்கணத்தில் ஆராயப்படும். ழுதமிழ் மொழியில் இலக்கணம் என்பது மொழியை மாத்திரம் ஆராய்வதாக அன்றி அம்மொழியினாலான இலக்கியம், அவ்விலக்கியத்தின் பொருள், வடிவம் ஆகியனவற்றை யெல்லாம் ஆராயும் ஒரு நெறியாக அமைந்த(து)ழு 1 என்னும் அ.சண்முகதாஸ் அவர்களின் கருத்து ஓர் அடிப்படை உண்மையாகும். எனவேதான் தொல்காப்பியர் காலத்திலேயே தமிழ் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று இயல்களாக ஆராயப்பட்டது.
தொல்காப்பியச் செய்யுளியலுக்கு இணையாகக் காக்கை பாடினியாரின் யாப்புமரபு ஒன்றும் பண்டைக் காலத்தில் வழக்கில் இருந்திருக்கவேண்டும். இந்த யாப்புநெறி நாளடைவில் மிகச் சிறப்பாக வளர்ந்து பாக்கள் இனங்களோடு பல்கிப் பொலிவடைந்த காலத்தில் யாப்பிலக்கணம் தனியே விரிவடைந்து தமிழ் இலக்கணம் நான்கு கூறுகளை உடையதாயிற்று. இந்த நான்கும் பெரும்பாலும் தமிழிற்கே உரிய இலக்கணத்தை ஆராய்தலாம். வீரசோழியத்தின் வடமொழி வழிப்பட்ட யாப்பியல், இலக்கியம் கண்டு இயம்பப்பெற்ற இலக்கணச் செந்நெறியன்மையின் அதனைக் கருத்தில் கொள்ள வேண்டுவதின்று.
அகப்புறத்துறைச் செய்திகளைச் சிறுசிறு வரலாற்றுத் துணுக்குகளோடு சேர்த்துப்பாடும் சங்கத் தனிப்பாடல்கள் கீழ்க்கணக்கு நூல்களாகவும் காப்பியங்களாகவும் மலர்ந்தன. சமய உண்மைகளும் நீண்ட கதைகளும் பாடுபொருளாயின.

1.
தமிழ்மொழி இலக்கண இயல்புகள் - அ. சண்முகதாஸ் பக்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 25-05-2018 15:33:33(இந்திய நேரம்)