பிற்பகல் 2.20 மணி வாக்கில் பிறந்தவர் என மிகத்
துல்லியமாகக் கூறலாம்.
பிறந்த ஊர் திருநெல்வேலி, தந்தையார் செந்தில்நாயகம்
பிள்ளை, தாயார் பெயர் பேச்சிமுத்தம்மை,
பெற்றோர்களால் இவருக்குச் சூட்டப்பெற்ற இயற்பெயர்
சங்கரலிங்கம் என்பதாகும். இவருக்குத் தமிழ்ப்புலமை
கருவிலேயே திருவாய் வாய்த்தது. தன் ஒன்பதாம்
அகவையிலேயே தென்காசியை அடுத்த சுரண்டை என்னும்
ஊரில் எழுந்தருளியுள்ள பூமி காத்தாள் என்னும்
அம்மனைப் பற்றி,
ழுஅமுதம் கடையும்நாள் ஆலம் வெடித்துத்
திமுதமெனத் தீயெரித்துச் சென்றது - அமுதமெனத்
தீக்கடவுள் உண்டார் திருக்கண்டத் தைப்பிடித்துக்
காத்ததனால் பூமிகாத் தாள்ழு
என்னும் வெண்பாவை இயற்றினார். அன்றிலிருந்து இவர்
நடுநாட்டின் திருவாமாத்தூரில் குருவருளில் கலந்த
விளம்பி வருடம் ஆனி மாதம் இருபத்து மூன்றாம் நாள்
செவ்வாய்க் கிழமை (5.7.1898) முடிய ஐம்பதாண்டுக்
காலத்தில் நூறாயிரம் கவிதைகளுக்கு மேல் பொழிந்து
தள்ளினார். தாம் இயற்றிய பாடல்களைத் தாமே நன்றாகச்
செப்பம் செய்யப் பெற்ற ஓலைச்சுவடிகளில் அழகாக எழுதி
வைத்துள்ளார். இறைவன் மீது கொண்ட ஊடலால் தாமே தன்
படைப்புகளில் பாதியை அனலிலும் புனலிலும் இட்டு
அழித்துவிட்டார் எஞ்சிய சுவடிகள் இன்று
இச்சுவாமிகளின் உபதேச பரம்பரையைச் சேர்ந்த
சிரவையாதீனத்தில் பேணிக் காக்கப்பட்டு வருகின்றன.
இவரால் இயற்றப்பெற்ற நூல்களுள் புலவர் புராணம்
அருணகிரிநாதர் புராணம் ஆகிய வாழ்க்கை வரலாற்றுக்
காப்பியங்களும், குருபரதத்துவம் என்னும்
தன்வரலாற்றுக்