காப்பியமும், அறுவகை இலக்கணம், ஏழாம் இலக்கணம்
வண்ணத்தியல்பு என்னும் மூன்று இலக்கண நூல்களும்,
முசு குந்த நாடகம் என்னும் இசைநாடகமும்,
முத்தமிழ்ப் பாமாலை என்னும் புதுமைப்படைப்பும்,
திருவாமாத்தூர்ப் புராணமாகிய தலபுராணமும், ஏழாயிரப்
பிரபந்தம் என்னும் துதிப்பனுவலும் தமிழின்
சிறப்புணர்த்தும் தமிழ் அலங்காரம் என்னும்
சிற்றிலக்கியமும் நானிலைச் சதகம், கௌமார முறைமை,
கௌமாரலகரி, கௌமார வினோதம், கௌமார தீபம்,
தியானாநுபூதி ஞானவந்தாதி, சதகஉந்தி, பிரணவா நூபதி
முதலிய சாத்திர நூல்களும் சிறப்பாகக்
குறிப்பிடத்தக்கன ஆகும். இவரால் இயற்றப்பெற்ற
பிள்ளைத்தமிழ்கள் ஐந்து: கலம்பகங்கள் ஆறு; அந்தாதி
வகைகள் பலப்பல; உலாவும் கோவையும் ஒவ்வொன்று.
இவரால் இயற்றப்பெற்ற திருச்செந்தூர்க் கோவை பிற
ஐந்திணைக் கோவைகளைப் போலத் துறைவகையாகத்
தொகுக்கப்படாமல், தொல்காப்பியநெறி பற்றிக்
கையாகத்தொகுக்கப்பட்டுள்ளது என்பதும் இதில்
செந்தில்நாதனே கிளவித் தலைவனாகவும் உள்ளான்
என்பதும் சிறப்பாகக் கருதப்படவேண்டிய செய்தியாகும்.
இப் பதிப்பாசிரியனின் அறிவுக் கெட்டியவரை இவ்வாறு
அமைந்த ஐந்திணைக் கோவைநூல் இது ஒன்றுதான்.
இவர் மொத்தம் பனிரெண்டு வண்ணங்களையும்,
நூற்றுக்கும் மேற்பட்ட வகுப்புகளையும், எண்ணற்ற
திருப்புகழ்ப் பாக்களையும் இயற்றியுள்ளார். சந்த
இலக்கியத்தில் இவர் அருணகிரிநாதருக்கு இணையானவராகவே
விளங்குகிறார்.
இவருடைய நூல்களில் ஏறக்குறைய பாதிதான்
பதிப்பாகியுள்ளன. எனினும் அவை பல்வேறு காலங்களில்,
பல்வேறு இடங்களில், பல்வேறு வடிவங்களில்
பதிப்பான்மையின் ஒரே சீராக இல்லை. அதனால் இப்போது
கிடைக்கின்ற ஐம்பதினாயிரம் பாடல்களையும், ஒரே சீரான
பதிப்புகளாகச் சுமார் 40