அறுவகையிலக்கண நூற்பாக்கள் மூலச்
சுவடியிலிருந்தவாறு செப்பம் செய்து கொள்ளப்பட்டன.
1983-ஆம் ஆண்டு மார்ச் திங்களில் முதல் 14
நூற்பாக்களுக்கான உரை, மாதிரிக்காக மாண்புமிகு
துணைவேந்தர் அவர்களுக்கு அனுப்பப் பெற்று ஒப்புதல்
பெறப்பட்டது. உரைப்பணி ஓலைச்சுவடித் துறையின் எனது
வழக்கமான பணிகளோடு நடைபெற்றுவந்தது.
1983-ஆம் ஆண்டு ஜுன் மாதம் இந்நூலாசிரிய
சுவாமிகளின் பெயரரும் இந்நூலைத் தம் தந்தையாரிடம்
முறையாகப் பாடம் கேட்டவரும் திருவாமாத்தூர்க்
கவுமார மடாலயத்தின் தலைவருமாகிய தவத்திரு. முருகதாச
அடிகள் தஞ்சைக்கு வந்து நான்கு நாள்கள்
தங்கியிருந்து அன்றுவரை எழுதப்பட்டிருந்த 510
நூற்பாக்களின் உரையை ஆழமாகப் படித்துப் பார்த்தார்.
உரை தௌ¤வாகவும் தாம் பாடம் கேட்டமுறைக்கு
மாறுபாடில்லாமலும் இருப்பதாகக் கருத்துத்
தெரிவித்து மாண்புமிகு துணைவேந்தர் அவர்களுக்கும்
கடிதம் எழுதினார். இறுதியில் தட்டச்சுச்
செய்யப்பெற்ற ழுஅறுவகை இலக்கணம்ழு 1984-ஆம் ஆண்டு
மார்ச்சுத் திங்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்
சேர்க்கப்பெற்றது.
தமிழ்ப் பல்கலைக்கழக விதிகளின் படி இந்நூல்
1987-ஆம் ஆண்டு ஜுன் மாதம் கரந்தைத் தமிழ்க்
கல்லூரி முதல்வர் பேரா. பி. விருத்தாசலம் அவர்களால்
நுண்ணாய்வு செய்யப்பட்டது. அண்ணாமலை நகர் கே.பி.டி.
அச்சகத்தாரால் அச்சடிக்கப்பட்டு இப்பொழுது
வெளியாகிறது.
முன்பே குறிப்பிடப்பெற்றவாறு இப்பதிப்பிற்கு
நூலாசிரியர் தம் திருக்கரத்தால் எழுதியருளிய
மூலப்படியே ஆதாரம் ஆகும். எனவே இதில் பாடபேதம்
என்பதற்கே இடமில்லை. இப்பதிப்பின்
நூற்பாக்களுக்கும் பேரூர்ப்பதிப்பிற்கும் மிகச் சில
இடங்களில் வேறுபாடுகள் காணப்படும். அத்தகைய
இடங்களில் பேரூர்ப் பதிப்பின் பாடங்கள்
மூலபாடங்களன்மையின் அவை