Primary tabs
3. ஆறாரச்சக்கரபெந்தம்
479-ஆம்பக்கத்திலுள்ளது.
-----------
போதனுமன்பிற்றொழுகேசவபுரைகூர்பவமே
வாதிதமாகுதற்கிங்கேயெனாருயிர்காபொதுவே
வேதநமாநமபோதநைவார்க்குள்ளமேதகவே.
இது, இடப்பக்கத்தாரின் முனைநின்றுதொடங்கி வலப்பக்கத்தாரின் முனையிறுதிமேலேறி ஓரடிமுற்றி, அடுத்த கீழாரின்முனைநின்று மேலாரின்முனையிறுதிமேலேறி இரண்டாமடிமுற்றி, அடுத்த வலப்பக்கத்தாரின் முனைநின்று இடப்பக்கத்தாரின்முனையிறுதிமேலேறி மூன்றாமடிமுற்றி, முற்றிய வேகாரத்தினின்று மறித்துந் தொடங்கி வட்டை வழி யிடஞ்சுற்றிச் சென்று மறித்தும் அவ்வேகாரத்தைக்கொண்டு நான்காமடி முற்றியவாறு காண்க.
--------