Primary tabs
4. எட்டாரச்சக்கரபெந்தம்
480-ஆம்பக்கத்திலுள்ளது.
-------
பொன்னணிமுலைநிடதப்புரைவரைநிகர்
மடிசேர்தருதாமதபத்தர்க்கெட்டா
மாறன்றுடரிமலைதன்மின்போன்றொளிர்
தண்ணென்பொற்சுனைமன்னியமாமல
ரம்மடவார்மையுண்டாட்டமர்கண்ணே.
இது, இடக்குறுக்காரின்முனைதொடங்கி வலக்குறுக்காரின்முனை யிறுதிசென்று முதலடிமுற்றி, அதனையடுத்த இடக்கீழாரின்முனை தொடங்கி அதனெதிர் மேலாரின்முனையிறுதி இரண்டாமடிமுற்றி, அதனையடுத்த கீழாரின்முனைதொடங்கி யதனெதிர்நின்ற மேலாரின் முனையிறுதிசென்று மூன்றாமடிமுற்றி, அதனையடுத்த வலக்கீழாரின் முனைதொடங்கி யெதிர்நின்ற மேலாரின்முனையிறுதிசென்று நான்காமடி முற்றி, முதலடிதொடங்கிய தகரத்தினின்று வட்டைவழியே யிடஞ் சுற்றி ஐந்தாமடியாறாமடிகள் முற்றியவாறு காண்க.
இதனுள், முதலடிதொடங்கிவந்த குறட்டெழுத்துக்களை யிடஞ் சுற்றிப்படிக்கவடமலையப்பன் என்னுந் திருநாமம்வருமாறு காண்க.
--------