தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU

 
 

6. பதுமபெந்தம்

482-ஆம்பக்கத்திலுள்ளது.

--------

மாறாமாலாலேமாறாமா
மாறாமாவேளேமாறாமா
மாறாமாகோவாமாறாமா
மாறாமாவாதேமாறாமா.

இது, நடுப்பொகுட்டினின்றும் மேல் வலக்கோணத்துள்ள அகவிதழ் புறவிதழ்சென்று வலமே அடுத்த புறவித ழகவிதழ்வழியே பொகுட்டினிழிந்து அடுத்த அகவிதழ்வழி புறவிதழ்சென்று முதலடிமுற்றி, மறித்தும் பொகுட்டினின்றும் கீழ் வலக்கோணத்துள்ள அகவிதழ் புறவிதழ் வழி அடுத்த கீழ்க்கோணத்துள்ள புறவித ழகவிதழ்சென்று பொகுட்டினிழிந்து கீழிடக்கோணத்துள்ள அகவிதழ்வழி யதன்புறவிதழ்சென்று இரண்டாமடிமுற்றி, மறித்தும் பொகுட்டினின்று கீ ழிடக்கோணத்துள்ள அகவிதழ் புறவிதழ்வழி இடக்கோணத்துள்ள புறவித ழகவிதழ் சென்று பொகுட்டினிழிந்து மே லிடக்கோணத்துள்ள அகவிதழ்வழி அதன் புறவிதழ்சென்று மூன்றாமடிமுற்றி, மறித்தும் பொகுட்டினின்று மே லிடக்கோணத் தகவிதழ் புறவிதழ்வழி மேற்கோணத்துள்ள புறவித ழகவிதழ்சென்று பொகுட்டினிழிந்து முதலடிதொடங்கிச் சென்றகோ ணத்திகழ்களிற்சென்று நான்காமடிமுற்றியவாறு காண்க.

-------------

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 15:52:45(இந்திய நேரம்)