தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU

 
 

7. முரசபெந்தம்

483, 484-ஆம்பக்கங்களிலுள்ளது.

---------

போதவானதுவாதரா
மாதவாதணவாதநா
நாதவாணதவாரவா
வேதவானதுவாரகா

இது, செவ்வேவரைந்தநான்கடியுள்ளும் முதலடியு மீற்றடியும் நான்கடிகளிலும் மாறாடிக் கோமூத்திரிபோல மடங்கிச்சென்று முற்றியும், இரண்டாமடி முற்சதுரத்தின்வலஞ்சென்று நான்கடியிலும் மாறாடி மூன்றாமடிமுதலெழுத்தான்முடிந்தும், மூன்றாமடி, பிற்சதுரத்தின் இரண்டாமடி யினிறுதியெழுத்தினின்றுதொடங்கி இடஞ்சென்று நான்கடியினுமாறாடி மூன்றாமடியினிறுதியெழுத்தான் முடியுமாறு காண்க. அன்றியும், இரண்டுமூன்றாமடிகள் முறையே முற்பாதி பிற்பாதிகளில் வலமிடமாகத் தம்முண் மாறாடிமுழுவதுங் காண்க.

-----------

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 15:53:01(இந்திய நேரம்)