தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தங்கால் முடக்கொல்லனார்


தங்கால் முடக்கொல்லனார்
217. குறிஞ்சி
தினை கிளி கடிதலின், பகலும் ஒல்லும்;
இரவு நீ வருதலின், ஊறும் அஞ்சுவல்;
யாங்குச் செய்வாம், எம் இடும்பை நோய்க்கு?' என
ஆங்கு யான் கூறிய அனைத்திற்குப் பிறிது செத்து,
ஓங்கு மலைநாடன் உயிர்த்தோன்மன்ற;
ஐதேய் கம்ம யானே;
கழி முதுக்குறைமையும் பழியும் என்றிசினே.
உடன்போக்கு நயப்பத் தோழி தலைமகட்குக் கூறியது. - தங்கால் முடக்கொல்லனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:15:11(இந்திய நேரம்)