தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மாங்குடி கிழார்


மாங்குடி கிழார்

302. குறிஞ்சி
உரைத்திசின்-தோழி!-அது புரைத்தோ அன்றே?
அருந் துயர் உழத்தலும் ஆற்றாம்; அதன்தலைப்
பெரும்பிறிதாகல் அதனினும் அஞ்சுதும்;
அன்னோ! இன்னும், நல் மலை நாடன்,
'பிரியா நண்பினர் இருவரும்' என்னும்
அலர்-அதற்கு அஞ்சினன்கொல்லோ? பலர் உடன்
துஞ்சு ஊர் யாமத்தானும், என்
நெஞ்சத்து அல்லது வரவு அறியானே.
வரைவிடைக் கவன்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது. - மாங்குடி கிழார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:22:01(இந்திய நேரம்)