தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அம்ம வாழி தோழி நம்ஊர்ப்


அம்ம வாழி தோழி நம்ஊர்ப்

146. குறிஞ்சி
அம்ம வாழி, தோழி!-நம் ஊர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ?-
தண்டுடை கையர், வெண்தலைச் சிதவலர்,
'நன்றுநன்று' என்னும் மாக்களொடு
இன்று பெரிது என்னும், ஆங்கணது அவையே.
தலைமகன் தமர் வரைவொடு வந்து சொல்லாடுகின்றுழி, 'வரைவு மறுப்பவோ?' எனக் கவன்ற தலைமகட்குத் தோழி சொல்லியது. - வெள்ளிவீதியார்.
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:31:43(இந்திய நேரம்)