தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அமிழ்து பொதி செந்தா


அமிழ்து பொதி செந்தா

14. குறிஞ்சி
அமிழ்து பொதி செந் நா அஞ்ச வந்த
வார்ந்து இலங்கு வை எயிற்றுச்சில் மொழி அரிவையைப்
பெறுகதில் அம்ம, யானே! பெற்றாங்கு
அறிகதில் அம்ம, இவ் ஊரே! மறுகில்,
'நல்லோள் கணவன் இவன்' எனப்
பல்லோர் கூற, யாஅம் நாணுகம் சிறிதே.
'மடன்மா கூறும் இடனுமார் உண்டே' என்பதனால் தோழி குறை மறுத்துழி, தலைமகன். 'மடலேறுவல்' என்பதுபடச் சொல்லியது. - தொல் கபிலர்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:32:44(இந்திய நேரம்)