தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இவன் இவள் ஐம்பால்


இவன் இவள் ஐம்பால்

229. பாலை
இவன் இவள் ஐம்பால் பற்றவும், இவள் இவன்
புன் தலை ஓரி வாங்குநள் பரியவும்,
காதற் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது,
ஏதில் சிறு செரு உறுபமன்னோ!
நல்லை மன்றம்ம பாலே-மெல் இயல்
துணை மலர்ப் பிணையல் அன்ன இவர்
மணம் மகிழ் இயற்கை காட்டியோயே.
இடைச் சுரத்துக் கண்டார் தம்முள்ளே சொல்லியது. - மோதாசனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:36:25(இந்திய நேரம்)