தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

உடுத்தும் தொடுத்தும்


உடுத்தும் தொடுத்தும்

295. நெய்தல்
உடுத்தும், தொடுத்தும், பூண்டும், செரீஇயும்,
தழை அணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி,
விழவொடு வருதி, நீயே; இஃதோ
ஓர் ஆன் வல்சிச் சீர் இல் வாழ்க்கை
பெரு நலக் குறுமகள் வந்தென,
இனி விழவு ஆயிற்று என்னும், இவ் ஊரே.
வாயில் வேண்டிச் சென்ற கிழவற்குத் தோழி உரைத்தது. - தூங்கலோரி
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:37:20(இந்திய நேரம்)