தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

எழுதரு மதியம்


எழுதரு மதியம்

315. குறிஞ்சி
எழுதரு மதியம் கடல் கண்டாஅங்கு
ஒழுகு வெள் அருவி ஓங்கு மலைநாடன்
ஞாயிறு அனையன்-தோழி!-
நெருஞ்சி அனைய என் பெரும் பணைத்தோளே.
வரைவிடை, 'வேறுபடுகின்றாய்' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- மதுரை வேளாதத்தன்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:39:59(இந்திய நேரம்)