தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கன்றுதன் பயமுலை


கன்றுதன் பயமுலை

225. குறிஞ்சி
கன்று தன் பய முலை மாந்த, முன்றில்
தினை பிடி உண்ணும் பெருங் கல் நாட!
கெட்ட இடத்து உவந்த உதவி கட்டில்
வீறு பெற்று மறந்த மன்னன் போல,
நன்றி மறந்து அமையாய் ஆயின், மென் சீர்க்
கலி மயிற் கலாவத்தன்ன இவள்
ஒலி மென் கூந்தல் உரியவால் நினக்கே.
வரைவிடை வைத்துப் பிரிவாற்குத் தோழி சொல்லியது. - கபிலர்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:47:59(இந்திய நேரம்)