தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

காமம் ஒழிவது ஆயினும்


காமம் ஒழிவது ஆயினும்

42. குறிஞ்சி
காமம் ஒழிவதுஆயினும்-யாமத்துக்
கருவி மா மழை வீழ்ந்தென, அருவி
விடரகத்து இயம்பும் நாட!- எம்
தொடர்பும் தேயுமோ, நின்வயினானே?
இரவுக்குறி வேண்டிய கிழவற்குத் தோழி நேர்ந்த வாய்ப்பாட்டான் மறுத்தது - கபிலர்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:48:36(இந்திய நேரம்)