தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

காலையும் பகலும்


காலையும் பகலும்

32. குறிஞ்சி
காலையும், பகலும், கையறு மாலையும்,
ஊர் துஞ்சு யாமமும், விடியலும், என்று இப்
பொழுது இடை தெரியின், பொய்யே காமம்:
மா என மடலொடு மறுகில் தோன்றித்
தெற்றெனத் தூற்றலும் பழியே;
வாழ்தலும் பழியே-பிரிவு தலைவரினே.
பின்நின்றான் கூறியது. - அள்ளூர் நன்முல்லையார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:49:25(இந்திய நேரம்)