தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கைவினை மாக்கள்


கைவினை மாக்கள்

309. மருதம்
கைவினை மாக்கள் தம் செய் வினை முடிமார்,
சுரும்பு உண மலர்ந்த வாசம் கீழ்ப்பட,
நீடிய வரம்பின் வாடிய விடினும்,
'கொடியோர் நிலம் பெயர்ந்து உறைவேம்' என்னாது'
பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும்
நின் ஊர் நெய்தல் அனையேம்-பெரும!-
நீ எமக்கு இன்னாதன பல செய்யினும்,
நின் இன்று அமைதல் வல்லாமாறே.
பரத்தையிற் பிரிந்து வந்த கிழவற்குத் தோழி வாயில் நேர்ந்தது.- உறையூர்ச் சல்லியன் குமாரன்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:51:28(இந்திய நேரம்)